‘சவுத் லாபி உடன் பாஜகவுக்கு உள்ள தொடர்பை அமலாக்கத்துறை விசாரிக்குமா?’ -ஆம் ஆத்மி சவால்

ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிஷி, சௌரப் பரத்வாஜ்
ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிஷி, சௌரப் பரத்வாஜ்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், சர்ச்சைக்குரிய சவுத் லாபி உடன் பாஜகவுக்கு உள்ள தொடர்பை, அமலாக்கத்துறை சுதந்திரமாக விசாரிக்குமா என ஆம் ஆத்மி சவால் விடுத்துள்ளது.

“அரவிந்த் கேஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டிருக்கும் மதுபானக் கொள்கை வழக்கில், அவருக்கு எதிரான சாட்சிகள் மற்றும் சவுத் லாபி குழுக்களுடன் பாஜகவுக்கு உள்ள தொடர்பு பற்றி அமலாக்கத்துறை சுதந்திரமான விசாரணை நடத்துமா?” என ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி இன்று சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெல்லி அரசின் ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிஷி, சௌரப் பரத்வாஜ் ஆகியோர் மேலும் பல புதிய கேள்விகளை எழுப்பினர்.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மகுந்தா சீனிவாசலு ரெட்டியின் மகன் ராகவ மகுந்தா ரெட்டி, மக்களவைத் தேர்தலில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியால் களமிறக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும், ஆம் ஆத்மி அமைச்சர்கள் கேள்வி தொடுத்தனர். ’அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பாக இருக்குமெனில் இது குறித்து விசாரிக்கட்டும்’ என்றும் ஆம் ஆத்மி அமைச்சகர்கள் சவால் விடுத்துள்ளனர்.

இந்த தந்தை - மகன் மகுந்தாக்கள் அளித்த சாட்சியத்தின் பெயரிலேயே கேஜ்ரிவால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டார். ”முன்னதாக கேஜ்ரிவாலுக்கு எதிரான மற்றொரு சாட்சியான சரத் ரெட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ55 கோடி செலுத்தியுள்ளார். இது பாஜகவுக்கு சவுத் லாபி உடன் உள்ள தொடர்பை வெளிச்சமிடுகிறது” என்றும் அதிஷி குற்றம் சாட்டினார். அதுமட்டுமன்றி கேஜ்ரிவாலுக்கு எதிராக சாட்சிகளிடமிருந்து வாக்குமூலம் பெறும் வகையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சாட்சிகளை சித்ரவதை செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

மதுபானக் கொள்கை வழக்கில் அடுத்தபடியாக டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட்டை அமலாக்கத்துறை விசாரிக்க முற்படுவதை குறிப்பிட்ட அதிஷி, "கேஜ்ரிவாலின் கைது இந்த நாட்டு ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். கேஜ்ரிவாலைத் தொடர்ந்து என்னையும் இதர ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களையும்கூட அமலாக்கத்துறை கைது செய்யக்கூடும். ஆனால் நாங்கள் சிறை செல்வதற்குப் பயப்படவில்லை” என்றும் அதிஷி திடமாக தெரிவித்தார்.

கேஜ்ரிவால் கைதை முன்வைத்தே அரசியல் களத்தில் அனுதாப வாக்குகளை அறுவடை செய்யவும், பாஜக இமேஜை டேமேஜ் செய்யவும் ஆம் ஆத்மி வியூகம் கொண்டுள்ளது. அதற்காக அன்றாடம் புதிய குற்றச்சாட்டுகள் மற்றும் சவால்களையும் விடுத்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in