டெல்லி மேயரானார் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய்: பாஜக தோல்வியடைந்தது

ஷெல்லி ஓபராய்
ஷெல்லி ஓபராய்டெல்லி மேயரானார் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய்

டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றிபெற்றுள்ளார். அவர் பாஜகவின் ரேகா குப்தாவை 34 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்று தேர்தல் அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்தனர். எம்சிடி மேயர் தேர்தலில் மொத்தம் பதிவான 266 வாக்குகளில் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகளும், பாஜகவின் ரேகா குப்தா 116 வாக்குகளும் பெற்றனர்.

டெல்லி மாநகராட்சியில் டிசம்பரில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு, ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே நீடித்த மோதலால் மேயர் தேர்தல் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. லெப்டினன்ட் கவர்னரால் பரிந்துரைக்கப்பட்ட 10 உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற பாஜகவின் வாதத்தை எதிர்த்து ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள், "நியமன உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று அரசியலமைப்பு விதி மிகவும் தெளிவாக உள்ளது" என்று சில நாள்களுக்கு முன்பு தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றுள்ளது.

ஷெல்லி ஓபராய்
ஷெல்லி ஓபராய்டெல்லி மேயரானார் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய்

முன்னதாக, டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அது 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக இரண்டாவது இடத்துக்கு தள்ளியது. இத்தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in