அனுமன் கோயிலில் தரிசனம்... டெல்லியில் ரோடு ஷோ: அதிரடி காட்டப்போகும் அர்விந்த் கேஜ்ரிவால்!

ஆம் ஆத்மி கட்சி - அர்விந்த் கேஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சி - அர்விந்த் கேஜ்ரிவால்

ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அனுமன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, டெல்லியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது. வருகிற ஜூன் 1-ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2-ம் தேதி அவர் மீண்டும் சிறையில் ஆஜராக வேண்டும்.

பகவந்த் மான் - அரவிந்த் கேஜ்ரிவால்
பகவந்த் மான் - அரவிந்த் கேஜ்ரிவால்

இதனிடையே நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் 4, 5, 6 மற்றும் 7ம் கட்ட தேர்தல்களில் அர்விந்த் கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வட மாநிலங்களில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், தெற்கு டெல்லியில் நடைபெறும் ரோடு ஷோவில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங் உடன் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

இன்று டெல்லி கண்ணாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், பின்னர் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து, இந்த ரோடு ஷோவில் பங்கேற்கும் அவர், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். அர்விந்த் கேஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in