பஞ்சாப் அரசைக் கவிழ்க்க பாஜக நடத்தும் குதிரை பேரம்: ஆம் ஆத்மி அமைச்சர் குற்றச்சாட்டு

பஞ்சாப் அரசைக் கவிழ்க்க பாஜக நடத்தும் குதிரை பேரம்: ஆம் ஆத்மி அமைச்சர் குற்றச்சாட்டு

பஞ்சாப் அரசை கவிழ்க்க 10 ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 25 கோடி ரூபாய் பேரம் பேசுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. அந்த அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருவதாக அம்மாநில நிதி அமைச்சரும், ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான ஹர்பால்சிங் சீமா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து. அவர் கூறுகையில், " டெல்லி ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்தவுடன் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயன்று வருகிறது. இதற்காக பாஜக ஏற்பாடு செய்த சிலர், 7 முதல் 10 ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். கட்சி மாறி வந்தால், தலா ரூ.25 கோடி தருவதாகவும், பாஜக ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி அளிப்பதாகவும் பேரம் பேசினர். தங்களுடன் கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்தால், இன்னும் அதிக பணம் அளிப்பதாகவும் கூறியுள்ளனர். அத்துடன் டெல்லியில், பெரிய தலைவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக,சட்டமன்ற உறுப்பினர்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நேரம் வரும்போது இதற்கான ஆதாரத்தை வெளியிடுவோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in