
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக நிச்சயம் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் அமமுக சார்பில் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்," எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் போடும் போட்டி டெல்லி வரை சென்று நிற்கிறது. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் இன்று குண்டர்கள் கையிலும் டெண்டர் விடுபவர்கள் கையிலும் சிக்கித்தவிக்கிறது. எடப்பாடி பழனிசாமியை ஒரு துரோகி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்" என்றார்.