குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு? - அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி!

கேஜ்ரிவால்
கேஜ்ரிவால்தி இந்து

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவளித்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங், “ தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு மீது மரியாதை உள்ளது. ஆனாலும் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக 17 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் தேர்தலின் வேட்பாளராக அறிவித்தது. ஆனால் இந்த ஆலோசனைக்கூட்டங்களில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்கவில்லை. அதே வேளையில் 17 எதிர்க்கட்சிகளில் இடம் பெற்றிருந்த சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரித்தன.

வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதுவரை ஆம் ஆத்மி கட்சி தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது. ஆம் ஆத்மி கட்சிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் 1.97% சதவீத வாக்குகள் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in