ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்தார் ஆதித்யா தாக்கரே!

ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்தார் ஆதித்யா தாக்கரே!

சிவசேனா கட்சியின்(உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவு) இளம் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இன்று இணைந்தார்.

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில் உள்ள கலம்நூரி பகுதியில் ஆதித்யா தாக்கரே இணைந்தார். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆதித்யா தாக்கரேவுடன் மகாராஷ்டிர மாநில சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வேயும் கலந்து கொண்டார்.

மகாராஷ்டிராவில் நடைபெறும் யாத்திரையில் பங்கேற்க சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா வழியா பாரத் ஜோடோ யாத்திரை இன்று 65வது நாளை எட்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, பாஜக - ஏக்நாத் ஷிண்டே இணைந்து ஆட்சியமைத்தனர். மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆதித்யா தாக்கரே ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொண்டது கூட்டணியை உறுதி செய்துள்ளது.

முன்னதாக, நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சுப்ரியா சுலே மற்றும் ஜிதேந்திர அவாத் ஆகியோர் ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் பங்கேற்றனர். யாத்திரையில் பங்கேற்க என்சிபி தலைவர் சரத் பவாருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in