`நாங்க எல்லாருமே நாம் தமிழர்தான்'- ஒரு கிராமமே சீமான் கட்சியில் சேர்ந்தது!

`நாங்க  எல்லாருமே நாம் தமிழர்தான்'- ஒரு கிராமமே சீமான் கட்சியில் சேர்ந்தது!

மயிலாடுதுறை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான  மக்கள் தங்களை  நாம் தமிழர் கட்சியில்  இணைத்துக் கொண்டுள்ளது மற்ற அரசியல் கட்சியினரியையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை தொகுதி அகரகீரங்குடி ஊராட்சியில் உள்ளது ஊர்குடி என்ற  கிராமம். இங்குள்ள  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொங்கல் திருநாளான நேற்று  தங்கள் குடும்பத்தோடு தங்களை  நாம் தமிழர் கட்சியில் இனைத்துக் கொண்டுள்ளனர்.

அங்கு நாம் தமிழர் கட்சியின்  கொடியேற்ற வேண்டும் என்று இந்த ஊர் இளைஞர்கள்  சிலர் ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்குள்ள மற்ற இளைஞர்கள்,  தங்களையும்  நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொள்ள முன்வந்தனர்.  இளைஞர்கள் அனைவரும் சேர்வதை பார்த்ததும் ஊரில் உள்ள பெண்கள்  உள்ளிட்ட பெரியவர்களும் தங்களையும் நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொள்வது என்று முடிவு எடுத்து நேற்று அந்த கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். 

நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தலைமையில் அங்குள்ள 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  சீமானின் உருவம் பதித்த உடைகளை அணிந்துகொண்டு நாம் தமிழர் கட்சியின்  புலிக்கொடியை  ஏற்றி அனைவரையும் நாம் தமிழர் கட்சியில் இணைத்தனர். பெண்கள்,  பெரியவர்கள் அனைவரும் சீமான் வாழ்க,  நாம் தமிழர் கட்சி வெல்க என்று முழக்கமிட்டு தங்களை அந்த கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

ஒரு கிராமமே ஒன்று சேர்ந்து புலிக்கொடி ஏற்றி தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளது மயிலாடுதுறை பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in