விபத்தில் சிக்கி சாலையில் துடிதுடித்த வாலிபர்: ஓடோடிச் சென்று முதலுதவி அளித்த ஆளுநர் தமிழிசை

விபத்தில் சிக்கி சாலையில் துடிதுடித்த வாலிபர்: ஓடோடிச் சென்று முதலுதவி அளித்த ஆளுநர் தமிழிசை
Updated on
1 min read

சாலை விபத்தில் சிக்கிய ஒருவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

புதுச்சேரியில் இருந்து நேற்று மாலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது வரும் வழியில் சாலையில் வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து துடிதுடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த தமிழிசை தன்னுடைய காரை நிறுத்தி அந்த வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் அந்த வாலிபரை ஆம்புலன்ஸ் மூலம் காட்டாங்கொளத்தூரில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மருத்துவரை தொடர்பு கொண்டு பேசிய தமிழிசை, அந்த வாலிபருக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவரிடம் தமிழிசை தொலைபேசியில் கேட்டறிந்தார். தற்போது அந்த இளைஞர் நலமுடன் இருப்பதாகவும், வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அதிவேகத்தில் செல்லும்போது தொலைபேசியில் பேசுவதை தவிர்க்குமாறும் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in