இந்துக்கள் குறித்து ஆ.ராசா எம்.பி பேச்சு: ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

திமுக எம்.பி ஆ.ராசா இந்துகள் குறித்துப் பேசியது ஏற்புடையது அல்ல என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், “ கடந்த எட்டு ஆண்டுகளாக பாஜகவை வீழ்த்த பல முயற்சிகள் நடந்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. அதற்குக் காரணம் பாஜக ஆட்சிதான் பல மாநிலங்களில் இருக்கிறது. மத்திய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் தான் எதிர்கட்சிகளின் ஒருங்கிணைப்பு நடைபெறவில்லை.

திமுக எம்.பி ஆ.ராசா இந்துகள் குறித்துப் பேசியது ஏற்புடையது அல்ல. திமுக மக்கள் முன் ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்துத்தான் வென்றது. ஆனால் இப்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. ராகுல் காந்தியின் ந்டைபயணம் அந்தக் கட்சிக்கு மட்டுமே நன்மைதரும். திமுக சில மாதங்களுக்கு முன்பு சொத்துவரியை உயர்த்தினார்கள். இப்போது மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். இப்போதுதான் கரோனா காலத்தில் விழுந்த பொருளாதாரத்தில் இருந்து மக்கள் மெல்ல எழுந்துவரும் நிலையில் திமுக அரசு இப்படிச் செய்கிறது.

தமிழகம் போதைப் பொருள் நடமாட்டத்தில் தலைநிமிர்ந்த மாநிலமாக உள்ளது. தமிழக அரசு, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து உயிரிழப்பு, சொத்துகள் முடக்கத்தைக் காக்க வேண்டும் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in