ஒரு குவாட்டர், ஒரு கோழி; குடிமன்னர்களை குஷிப்படுத்திய கட்சி நிர்வாகி: எங்கே தெரியுமா?

ஒரு குவாட்டர், ஒரு கோழி; குடிமன்னர்களை குஷிப்படுத்திய கட்சி நிர்வாகி: எங்கே தெரியுமா?

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று தேசிய கட்சியை தொடங்க உள்ள நிலையில், அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர், குடிமன்னர்களுக்கு குவாட்டரும், உயிருடன் ஒரு கோழியும் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் இருந்த தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு முதல்வராக சந்திரசேகர ராவ் இருந்து வருகிறார். இவர் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரை ஒன்று திரட்டி வருகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் உள்பட பலரை சந்தித்துப் பேசினார். பாஜகவுக்கு எதிராக இவரது நடவடிக்கை தீவிரம் அடைந்து வருகிறது. அண்மையில் தெலங்கானா மாநிலத்துக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்காமல் சென்றதோடு, விழாவை புறக்கணித்தார்.

இந்நிலையில், தேசிய அரசியலில் கால் பதிக்கும் நோக்கில் தேசிய கட்சியை இன்று தொடங்க இருக்கிறார் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ். இந்நிலையில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்தவர்கள் பலவிதங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தெலங்கானாவின் வாராங்கல் பகுதியை சேர்ந்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் நிர்வாகி ராஜனலா ஸ்ரீஹரி என்பவர் குடிமன்னர்களுக்கு ஒரு குவாட்டர் மற்றும் உயிருடன் இருக்கும் கோழியை இலவசமாக கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in