`இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்!'- மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிhindu கோப்பு படம்

"சாதாரண மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது. இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்" என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தாதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.

மத்திய பட்ஜெட்டை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் வேளையில் சாதாரண பொது மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது. எதையுமே குறிக்காத பெரிய வார்த்தைகளில் அரசாங்கம் தோற்றுவிட்டது. இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்” என்று விமர்சித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in