நடுரோட்டில் பற்றி எரிந்த சொகுசு கார்: எதிரே வந்த முதல்வர் செய்த காரியம் என்ன தெரியுமா?

நடுரோட்டில் பற்றி எரிந்த சொகுசு கார்: எதிரே வந்த முதல்வர் செய்த காரியம் என்ன தெரியுமா?

நடுரோட்டில் திடீரென கார் பற்றி எரிந்த போது அவ்வழியாக வந்த முதல்வர் காரை நிறுத்தி உதவி செய்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரைத் தொடர்ந்து பாதுகாப்பு வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. விலிபார்லி என்ற இடத்தில் அவர் கார் சென்று கொண்டிருந்த போது மறுபுறம் எதிரே வந்த சொசுகு கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதைக் கண்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது காரை நிறுத்தி விட்டு அதிகாரிகளுடன் சாலையின் மறுபக்கம் ஓடிச்சென்றார். அங்கு தீப்பற்றி எரிந்த காரினை ஓட்டி வந்த நபர் காரில் இருந்து இறங்கி தீயை அணைக்க முற்பட்டர். அப்போது அவரை எரியும் காரை விட்டு விலகி இருக்குமாறு கூறிய முதல்வர், காயம் எதுவும் பட்டுள்ளதா என்று விசாரித்தார். இதன்பின் அவருக்கு முதல்வர் உதவிகளைச் செய்தார்.

பின்னர் அந்த நபரின் பெயர் விக்ராந்த் என்றும், தனக்குத் தேவையான உதவிகளை முதல்வர் செய்தார் என்றார். தீயணைப்பு துறையினர் வந்து காரில் பற்றிய தீயை அணைக்கும் வரை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அங்கிருந்தார் என்றும், தீயை அணைத்த பிறகே அங்கிருந்து சென்றார் என்றும் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in