அரை கிமீ தூரம் காரை இழுத்துச் சென்ற கன்டெய்னர் லாரி; உயிர் தப்பிய கட்சித் தலைவர்: இரவில் நடந்த பயங்கரம்

அரை கிமீ தூரம் காரை இழுத்துச் சென்ற கன்டெய்னர் லாரி; உயிர் தப்பிய கட்சித் தலைவர்: இரவில் நடந்த பயங்கரம்

சமாஜ்வாதி கட்சியின் மாவட்ட தலைவர் சென்ற காரை கன்டெய்னர் லாரி ஒன்று அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங். இவர் நேற்று இரவு மெயின்புரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கன்டெய்னர் லாரி ஒன்று கார் மீது மோதியது. இதில், சிக்கிய காரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது கன்டெய்னர் லாரி. இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த லாரியை துரத்திக் கொண்டு ஓடினர். ஒரு கட்டத்தில் லாரி மோதி நின்றது. காரில் இருந்த தேவேந்திர சிங் யாதவ் சிறு காயத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக கன்டெய்னர் லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் சினிமா காட்சியைப் போல் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in