'கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே!': நடிகர் கமலுக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்

'கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே!': நடிகர் கமலுக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்

நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

'உலக நாயகன்' என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், " தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்" என்று வாழ்த்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in