மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்கும் ஆளுநர்: கடுப்பில் அமைச்சர்!

சித்த மருத்துவ பல்கலைகழக மசோதா விவகாரம்
ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவிமீண்டும் மீண்டும் விளக்கம் கேட்கும் ஆளுநர்: கடுப்பில் அமைச்சர்!

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பி சில ஐயங்களைக் கேட்டிருந்தார்.

குறிப்பாக, சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடக்குமா, தேசிய தேர்வு முறைகளை இந்த சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் ஏற்று அதன்படி நடக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

இதற்குத் தமிழக அரசு சார்பில் பதில் அனுப்பப்பட்டது. அதில், வழக்கமாக மருத்துவக் கல்லூரிகளில் என்ன மாதிரியான நடைமுறைகள் இருக்கிறதோ அதே நடைமுறைகள்,  சித்த மருத்துவ பல்கலைக் கழகத்துக்கும் பின்பற்றப்படும் எனக் கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி ஆளுநருக்கு பதில் அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், 6 மாதங்களை கடந்த நிலையில், 2 -வது முறையாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், மசோதாவைத் திருப்பி அனுப்பி உள்ளார். இந்தத் தகவலை  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in