ராகுலின் முத்தம் அன்பின் அடையாளம்; ப்ளூ ப்லிம் பார்க்கும் போது என்ன பண்ணீங்க? ஆவேசமான காயத்ரி ரகுராம்!

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

ராகுல் காந்தியின் சுபாவம் அதுதான், அவர் உட்காரும் போது அதே ஸ்டைலில் தான் இருப்பார் என்றும் ஃபிளையிங் கிஸ் அன்பின் அடையாளம் என பாஜகவின் முன்னாள் நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பாஜக பெண் உறுப்பினர்களைப் பார்த்து ராகுல் காந்தி பறக்கும் முத்தம் (ஃபிளையிங் கிஸ்) கொடுத்ததாகவும் இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் புகார் கொடுத்துள்ளனர்.

ராகுல் காந்திக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘’ பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் முன்னிலையில் உணர்ச்சியால் முத்தமிடுவது பிரச்சினையாக இருக்கும் போது இருவரையும் கண்டிக்க வேண்டும். இருவரும் பாராளுமன்றத்திற்கு முத்தம் கொடுத்தனர்.

ராகுல் காந்தியின் சிக்னேச்சர் ஸ்டைல் ஃபிளையிங்கிஸ்- ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அவர் தனது உரையை முடித்ததும் மேடையில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் சிக்னேச்சர் ஸ்டைல் ஃபிளையிங்கிஸ், பாரத் ஜோடோவில் சிக்னேச்சர் ஸ்டைல் ஃபிளையிங்கிஸ் பொதுமக்களுக்கு அன்பின் அடையாளமாக வழங்கினார்.

ஆனால் பாஜக தலைவர்கள் சட்டசபையில் ப்ளூபிலிம் பார்த்து பிடிபட்டுள்ளனர். பாஜக பெண் தலைவர்களிடம் இருந்து ஏன் குரல் கொடுக்கவில்லை? பல பொதுக்கூட்டங்களில் பல பாஜக தலைவர்கள் பகிரங்கமாக பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in