என் புதுச்செருப்பை மழைநீர் அடிச்சிட்டுப் போயிருச்சு: ஆறுதல் சொல்ல வந்த எதிர்கட்சி தலைவரிடம் அழுது அடம் பிடித்த சிறுவன்!

முகாமில் எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்
முகாமில் எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்

கேரளத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதில் எர்ணாகுளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு முகாமுக்குச் சென்ற கேரள எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் ஒரு சிறுவனை அழைத்துப்போய் செருப்பு வாங்கிக் கொடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கேரளா மாநிலம், எர்ணாகுளம் புத்தன்வேலிக்கரை பள்ளிக்கூடத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு கேரள எதிர்கட்சித் தலைவர் வி.டி.சுதீசன் வந்தார். அப்போது அந்த முகாமில் இருந்த ஜெயபிரசாத் என்னும் நான்கு வயது சிறுவன் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தான். உடனே எதிர்கட்சித் தலைவர் சுதீசனிடம்ஏன் இப்படி அழுகிறாய்? எனக் கேட்டார்.

உடனே அந்த சிறுவன், மழையில் வீட்டின் முன்பக்கத்தில் போட்டிருந்த என் புதுச்செருப்பு தண்ணீரில் அடித்துக்கொண்டு போய்விட்டது என அழுதான். வாங்கிக் கொள்ளலாம் என அவர் சமாதானம் சொல்லியும் கேட்காமல் ஜெயபிரசாத் அழுதுகொண்டே இருந்தான். உடனே, எதிர்கட்சித் தலைவர் சுதீசனை தனது காரிலேயே அழைத்துப்போய் புது செருப்பு வாங்கிக்கொடுத்து மீண்டும் முகாமிலேயே கொண்டு வந்துவிட்டார். எதிர்கட்சித் தலைவர் வி.டி.சுதீசனின் இந்த மனிதநேயச் செயல் பலரது பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in