நடிகை காயத்ரி ரகுராம் குறித்து ஆபாச பதிவு: பாஜக பிரமுகருக்கு எதிராக போலீஸ் அதிரடி நடவடிக்கை

பாஜக பிரமுகர் பாபு
பாஜக பிரமுகர் பாபுநடிகை காயத்ரி ரகுராம் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக பிரமுகர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் இருப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து அக்கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் தமிழக பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள், பிரமுகர்கள் நடிகை காயத்ரி ரகுராமை விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

குறிப்பாக தமிழக பாஜகவின் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்சி அணித் துணைச் செயலாளர் டி.பாபு, காயத்ரி ரகுராம் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதற்கு நடிகை கஸ்தூரி உட்பட பலரும் எதிர்வினையாற்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தனர்.

இதுத்தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது வழக்கறிஞர் மூலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அவரது புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் பாபு மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in