திருமணம் செய்து கொள்வதாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்: பெண் நிர்வாகி புகாரால் பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்: பெண் நிர்வாகி புகாரால்  பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு

பாஜக மகளிரணி நிர்வாகியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜக மாவட்ட தலைவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூர் மாவட்ட பாஜக தலைவர் ஸ்ரீகாந்த் தேஷ்முக். அவர் தன்னை பாலியல் செய்து விட்டதாக பாஜக மகளிரணி நிர்வாகியான நிர்மலா(32) புகார் செய்தார். தன்னை ஓட்டலுக்கு அழைத்து ஸ்ரீகாந்த் தேஷ்முக் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஓட்டல் அறையில் உள்ள படுக்கையில் ஸ்ரீகாந்த் படுத்திருக்கும் நிலையில் அவர் அருகே நின்றவாறு நிர்மலா தனது செல்போனில் பேஸ்புக் பக்கத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து சில நாட்களுக்கு முன் 'லைவ்' ஆக வீடியோ வெளியிட்டார்.
இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாஜக மாவட்டத்தலைவர் பொறுப்பில் இருந்து ஸ்ரீகாந்த் தேஷ்முக் ராஜினாமா செய்தார். அதேவேளை, தன்னிடம் இருந்து பணம்பறிக்கவே நிர்மலா இவ்வாறு நாடகமாடுவதாக அவர் போலீஸில் புகார் அளித்தார்.
இந்நிலையில், ஸ்ரீகாந்த் தேஷ்முக் மீது நிர்மலா போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி ஸ்ரீகாந்த் தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறியுள்ளார். அந்த புகாரைத் தொடர்ந்து பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in