துணைவேந்தர்கள் 9 பேர் ராஜினாமா செய்யவும்: தீபாவளி அன்று கெடு விதித்த கேரள ஆளுநர்!

துணைவேந்தர்கள் 9 பேர் ராஜினாமா செய்யவும்: தீபாவளி அன்று கெடு விதித்த கேரள ஆளுநர்!

9 பல்கலைக்கழக துணை வேந்தர்களை தீபாவளி அன்று காலை 11.30 மணிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் கெடு விதித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவில் அண்மை காலமாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழக துணைவேந்தர்களை தீபாவளி அன்று காலை 11.30 மணிக்குள் ராஜினாமா செய்யுமாறு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் உத்தரவிட்டிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டி காட்டி இதனை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு மறுஆய்வு மனுத்தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இன்னொருபுறம் ஆளுநரின் நகர்வுகளை எதிர்த்து போராட்டம் நடத்த ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. மாநில அரசுக்கும் கேரள ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்ச தொட்டு வருவது, கேரள அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in