அடேயப்பா... மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் அசாமில் இவ்வளவு வாக்குப்பதிவா?

வாக்களிக்கும் மக்கள்
வாக்களிக்கும் மக்கள்

நேற்று நடைபெற்ற மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது  அசாம் மாநிலத்தில் அதிகபட்சமாக 82 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

மூன்றாம் கட்டத் தேர்தலில் வாக்களித்த தலைவர்கள்
மூன்றாம் கட்டத் தேர்தலில் வாக்களித்த தலைவர்கள்

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்து நேற்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.  

உத்தரப்பிரதேசம், குஜராத், பிஹார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள்  ஆகியவற்றுக்கு  உட்பட்ட   93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன்  நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் காலையிலிருந்தே அதிக ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

முதற்கட்ட தேர்தலில் 66.14 சதவீதமும், 2ம் கட்ட தேர்தலில் 66.71 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 64.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் நாட்டிலேயே அசாம் மாநிலத்தில் அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளது. அங்கு  82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  உத்தரப்பிரதேசத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் 58 சதவீதத்துக்கும்  குறைவான வாக்குகளே  பதிவாகி இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிஹாரில்  58.18, சத்தீஸ்கர் 71.06,  தாத்ரா, டையூ மற்றும் டாமன் 69.87,  கோவா 75.20, குஜராத் 58.98, கர்நாடகா 70.41, மத்தியப் பிரதேசம் 66.05, மகாராஷ்டிரா 61.44, உத்தரப்பிரதேசம் 57.34,   மேற்கு வங்காளம் 75.79 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in