வரிசையாக நின்று ஓட்டுப்போட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர்: குஜராத் தேர்தலில் சுவாரசியம்

வரிசையாக நின்று ஓட்டுப்போட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர்: குஜராத் தேர்தலில் சுவாரசியம்

குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் வரிசையாக நின்று வாக்களித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய இரண்டு நாட்களில் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் முதலாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு வந்தனர். குஜராத் மாநிலத்திலுள்ள காம்ரேஜ் என்ற பகுதியில் வசிக்கும் இந்த குடும்பத்தை சேர்ந்த 81 பேர் பல்வேறு வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து விட்டு அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

இதில் மூத்த வாக்காளராக 82 வயதில் சோலங்கி என்பவரும் முதல் முதல் முறையாக வாக்களிக்கும் இரண்டு இளைஞர்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் ஒரே நேரத்தில் வந்து வாக்களித்து இருக்கிறோம் என்று சோலங்கி தெரிவித்துள்ளார். எங்கள் குடும்பத்தில் 96 பேர் உள்ளனர். ஆனால் 15 பேர் வேறு வேறு மாநிலங்களில் வசிப்பதால் அவர்களால் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in