‘80% எம்எல்ஏக்கள் சச்சின் பைலட்டுடன் உள்ளார்கள்’ - ராஜஸ்தான் அமைச்சர் அதிரடி

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

80 சதவீத எம்எல்ஏக்கள் சச்சின் பைலட்டுடன் இருப்பதாகவும், அவரை விட சிறந்த அரசியல்வாதி யாரும் இல்லை என்றும் ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா கூறினார்.

ராஜஸ்தான் காங்கிரஸில் மீண்டும் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையிலான மோதல் வலுத்துள்ளது. சச்சின் பைலட்டை "துரோகி" என்று கூறிய அசோக் கெலாட், அவர் ஒருபோதும் மாநிலத்தின் முதலமைச்சராக முடியாது என்று தெரிவித்த கருத்து பரபரப்பை உருவாக்கியுள்ளது. அசோக் கெலாட்டின் கருத்துக்கு பதிலளித்த மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, 80 சதவீத எம்எல்ஏக்கள் சச்சின் பைலட்டுடன் இருப்பதாகக் கூறினார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் குதா, "சச்சின் பைலட்டுடன் 80 சதவீத எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்றால், நாங்கள் முதல்வர் பதவிக்கான எங்கள் பங்கை விட்டுவிடுவோம். அவரை விட சிறந்த அரசியல்வாதி இல்லை" என்று கூறினார். இதனை நிரூபிக்க ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முதல்வர் கெலாட்டும், சச்சின் பைலட்டும் மீண்டும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். சச்சின் பைலட் ஒரு "துரோகி" என்றும், அவர் ஒருபோதும் மாநிலத்தின் முதல்வராக முடியாது என்றும் அசோக் கெலாட் கூறினார். இதற்கு பதிலளித்த பைலட். "அசோக் கெலாட் ஒரு மூத்த, அனுபவம் வாய்ந்த தலைவர். என் மீது பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்த அவருக்கு யார் அறிவுரை கூறுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இன்று கட்சியை வலுப்படுத்த வேண்டியது அவசியம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in