டெல்லியில் அதிகளவில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் வேட்பாளர்கள்: மற்ற கட்சிகளில் எத்தனை பேர்?

டெல்லியில் அதிகளவில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் வேட்பாளர்கள்: மற்ற கட்சிகளில் எத்தனை பேர்?

டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 780க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களமிறங்கினர். நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை கைப்பற்றி, பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. மொத்தம் 250 பேர் கொண்ட மாநகராட்சியில் பாஜக 104 வார்டுகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் 9 இடங்களிலும், 3 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 784 வேட்பாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை இழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 370 சுயேச்சைகள் தங்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 188 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியினர் 128 பேர், ஏஐஎம்ஐஎம் வேட்பாளர்கள் 13 பேர், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 3 பேர் மற்றும் பாஜகவை சேர்ந்த 10 பேர் வைப்புத்தொகையை இழந்துள்ளனர்.

2017 உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 270 வார்டுகளில் 181 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 48 வார்டுகளிலும், காங்கிரஸ் 27 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in