
தெலங்கானாவில் அடுத்த மாதம் 30-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அங்கு நெடுஞ்சாலையில் வந்த லாரியில் 750 கோடி ரூபாய் பணம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தெலங்கானா மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகளால் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கட்வால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். அதில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. மொத்தம் 750 கோடி ரூபாய் ரொக்கம் இருந்த நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்தினர்.
வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டது. அதில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா, வங்கிக்குச் சொந்தமான அந்த பணம், கேரளாவிலிருந்து ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அதற்கான அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்ததால் அந்த லாரியை தொடர்ந்து பயணிக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2016- ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, மே மாதம் கோவை - திருப்பூர் புறநகர் சாலையில் 3 கண்டெய்னர் லாரிகள் பிடிப்பட்டதும் அதில் 570 கோடி ரூபாய் இருந்ததும் பெரும் பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்
10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!
ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!
அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!