தனியார் துறை வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு சட்டம் ரத்து - நீதிமன்றம் அதிரடி!

பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம்
பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம்

தனியார் துறை வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் ஹரியாணா மாநில அரசின் சர்சைக்குரிய சட்டத்தை பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது.

உள்ளூர் சமூக மக்களின் குறிப்பாக, ஜாட் இன மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு, தனியார் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீதம் கட்டாயம் இடஒதுக்கீடு செய்யும் ''ஹரியாணா மாநில உள்ளூர் மக்கள் வேலைவாய்ப்பு சட்டம்''கடந்த 2020-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. அதன் பிறகு அந்த சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப் பட்டன.

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரியா
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரியா

இந்த சட்டமானது மாதச் சம்பளம் அல்லது ரூ.30,000-க்கும்குறைவான ஊதியத்துடன் 75% தனியார் துறை வேலைவாய்ப்புகளை மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு உறுதி செய்கிறது. மாநில குடியுரிமை சான்றிதழை பெறுவதற்கான காலமும் 15 ஆண்டுகள் என்பதிலிருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

 வழக்கு
வழக்கு

இந்த நிலையில், அந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் மாநில அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியாணாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மனோகர் லால் கட்டார் அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in