ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 74.69 சதவீதம் வாக்குப்பதிவு!

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 74.69 சதவீதம் வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 74.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி சிவக்குமார் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.பி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் மொத்தம் 77 பேர் போட்டி களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து காலையிலேயே தங்கள் வாக்கை பதிவை செலுத்தினர். காலை 9 மணிக்கு 10.10 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது. 11 மணிக்கு 27.89 சதவீதமும், 1 மணிக்கு 44.56 சதவீதமும், 3 மணிக்கு 59.28 சதவீதமும், 5 மணிக்கு 70.58 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டது. ஈரோடு ராஜாஜிபுரம் பள்ளி வாக்குச்சாவடியில் 500 வாக்காளர்களுக்கு வாக்களிக்க டோக்கன் தரப்பட்டிருக்கிறது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். 33 பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 238 வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற பகுதிகளில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், மாலை 6 மணி நிலவரப்படி 74.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in