தேசியவாத காங்கிரஸுக்கு 7 தொகுதிகள், காங்கிரஸுக்கு பூஜ்ஜியம்: நாகாலாந்து தேர்தல் முடிவுகளில் சுவாரஸ்யம்

சரத் பவார்
சரத் பவார்தேசியவாத காங்கிரஸுக்கு 7 தொகுதிகள், காங்கிரஸுக்கு பூஜ்ஜியம்: நாகாலாந்து தேர்தல் முடிவுகளில் சுவாரஸ்யம்

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் நாகாலாந்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. அதே நேரத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ காஜெட்டோ கினிமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் என்டிபிபி-பாஜக கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் பாஜக 11 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், 1 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல என்டிபிபி கட்சி 19 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

அதேபோல நாகாலாந்தில் என்பிஎப் கட்சி 4 தொகுதிகளில் வெற்றிபெற்று ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. லோக் ஜனசக்தி(ராம்விலாஸ்) கட்சி 1 தொகுதியில் வெற்றிபெற்று 2 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. நாகா மக்கள் முன்னணி 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒரு தொகுதியில் முன்னிலையும் வகிக்கிறது. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

ஆனால் காலையில் 2 தொகுதியில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு இடத்திலும் முன்னிலையில் இல்லை. அதே நேரத்தில் காங்கிரஸின் மகாராஷ்ட்டிர கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ், நாகாலாந்தில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் 4 தொகுதிகளில் முன்னிலையும் வகிப்பது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. 1993 முதல் 2003 வரை நாகாலாந்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 2003ல் 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. பிறகு 2008 சட்டமன்றத் தேர்தலில் 23 இடங்களிலும், 2013ல் 8 தொகுதிகளிலும் அக்கட்சி வென்றது. அதன்பின்னர் 2018, 2023ல் காங்கிரஸால் நாகாலாந்தில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத நிலை உள்ளது.

தற்போதைய தேர்தலில் நாகாலாந்தில் ஆளும் என்டிபிபி-பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிப்பதால் அக்கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in