திமுகவில் இருந்து 7 பேர் அதிரடி நீக்கம்

பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திமுகவில் இருந்து 7 பேர் அதிரடி நீக்கம்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி வேட்பாளர்களாகக் களமிறங்கியது, கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக வேலை பார்த்தது போன்ற தவறுகளைச் செய்த திமுகவினர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சின்னசேலம் பேரூர்க் கழகச்செயலாளர் எஸ்.கே.செந்தில்குமார், தருமபுரி கிழக்கு மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூர்க் கழக செயலாளர் உதயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரம் பேரூரைச் சேர்ந்த ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன்குமார், தஞ்சை வடக்கு மாவட்டம், வேப்பத்தூர் பேரூர்க்கழக துணைச்செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.ராஜதுரை ஆகியோர் கழகக்கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப்பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.