இளைஞரின் வயிற்றில் 63 நாணயங்கள்: ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இளைஞரின் வயிற்றில் 63  நாணயங்கள்: ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு வந்த இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து 63 ஒரு ரூபாய் நாணயங்களை மருத்துவர்கள் அகற்றி இருக்கிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் உள்ள எம்டிஎம் மருத்துவமனைக்குக் கடந்த புதன்கிழமை இளைஞர் ஒருவர் கடுமையான வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது உடலை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் வயிற்றில் உலோகக் கட்டி போல் மர்மப் பொருள் ஒன்று தென்படுவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அந்த இளைஞரிடம் மருத்துவர்கள் விளக்கம் கேட்டனர். அதற்கு சுமார் 15 ஒரு ரூபாய் நாணயங்களை அவர் விழுங்கிவிட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் இளைஞரின் வயிற்றிலிருந்து எண்டோஸ்கோப்பி மூலம் நாணயங்களை எடுக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு எண்டோஸ்கோப்பி முறையில் இரண்டு நாட்களாக வயிற்றிலிருந்த 63 ஒரு ரூபாய் நாணயங்கள் எடுக்கப்பட்டன.

தற்போது அந்த இளைஞர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். ஆனால் அவர் மன உளைச்சலுடனே இருந்து வருகிறார். வித்தியாசமானவற்றை உட்கொள்ளும் மனநிலை கொண்டவராக அந்த இளைஞர் இருப்பதால், அவரை மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். உரிய நேரத்தில் அவருக்குச் சிகிச்சை அளிக்காமல் போயிருந்தால் அவரின் உயிருக்கு ஆபத்து நேரிட்டிருக்கும். மன அழுத்தம் உள்ளவர்களை குடும்பத்தினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in