தீபாவளி டார்கெட் ரூ.600 கோடி: டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயம்?

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யத் தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் முக்கிய வருவாய்களில் முதன்மையானது மது விற்பனை. பண்டிகை தினங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்வதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் இலக்கு வைத்து மதுவிற்பனை செய்வது தமிழக அரசிற்கு வாடிக்கையாகி விட்டது. தமிழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்து வரும் நிலையில் இது போன்ற தகவல்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது இலக்கு வைத்து 431 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 24ம் தேதி திங்கட்கிழமையில் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால், மூன்று நாட்களிலும் தலா 200 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் மது வகைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும் மாவட்டங்களில் அதற்கான காரணங்களைக் கண்டறியவும், அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in