தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்... சோழிங்கநல்லூர் தொகுதி முதலிடம்

சத்ய பிரதா சாகு
சத்ய பிரதா சாகு

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெறும். பின்னர் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். அடுத்த ஆண்டு மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இப்பட்டியலில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். மொத்தம் 3.10 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3 கோடியும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8,016 பேர் உள்ளனர்.

புதிய வாக்காளர்கள் 3.94 லட்சம் பேர் உள்ளதாகவும், ஆண்கள் - 2.18 லட்சமும், பெண்கள்- 1.75 லட்சமும் உள்ளனர். தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. தொகுதியில் மொத்தம் 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

கீழ்வேளூர் தொகுதியில் மிக குறைவாக 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 6.20 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், '’17 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் 18 வயது நிரம்பியதும் பட்டியலில் சேர்க்கப்படும். வாக்காளர் உதவிக்கான மொபைல் செயலி மூலம் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் தொடக்கமாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்’’ என கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...


முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!

அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!

மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை

நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!

இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in