
ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். இடைக்கால ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து 53 நாட்களுக்குப் பின் சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியே வந்தார்
திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் (2014-19) இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.118 கோடி ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கடந்த 2021ம் ஆண்டில் தற்போதைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக சிஐடி போலீஸார் சந்திரபாபு நாயுடுவை கடந்த மாதம் 9-ம் தேதி கைது செய்து விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு இன்று சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!
கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!
சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!
அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!