இது சுத்தமான ஓட்டு!

இது சுத்தமான ஓட்டு!

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.inதலைநகர் சென்னையில் நீதிபதி ஒருவருக்கே ஓட்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், கோவையில் ஆதரவற்றோர் இல்லவாசிகள் 35 பேருக்கு வாக்குரிமை வாங்கிக் கொடுத்து அவர்களை அழைத்துச் சென்று வாக்களிக்கவும் வைத்திருக்கிறார் கங்காதரன்!

நீலகிரி கூடலூர் சேரம்பாடியைச் சேர்ந்த ஆறுமுகம், 40 வயதில் சர்க்கரை நோய்க்கு உள்ளானவர். அடிக்கடி மயங்கி விழும் இவரால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என உறவுகள் கைவிட்டுவிட்டன. இரண்டு கால்களும் அகற்றப்பட்டு பிளாட்பாரத்தில் கிடந்த இவரை கோவை ஆர்.எஸ்.புரம் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்தார்கள். இவரைப் போலவே உறவுகளால் துரத்தப்பட்ட நாகரத்தினம், கழுத்து எலும்பு பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் ரமேஷ், முதுகுத் தண்டுடவம் பாதித்த நவநீதகிருஷ்ணன் என உடல் நிலை பாதிக்கப்பட்டும், உறவுகளால் கைவிடப்பட்டும் இந்த இல்லத்தில் இருக்கும் 35 பேர் இம்முறை வாக்களித்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in