3 மாதங்களில் 500 ரெய்டுகள்; ஆனால் எதுவும் சிக்கவில்லை: பாஜக மீது பாயும் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அருகில் மணீஷ் சிசோடியா
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அருகில் மணீஷ் சிசோடியா

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை இன்று டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள 35 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விர்ந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறையின் தொடர் ரெய்டுகள் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்று மாதங்களில் 500-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டும், இன்னும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 500 ரெய்டுகள்... 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூன்று மாதங்களாக 24*7 வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரு மனிஷ் சிசோடியாவுக்கு எதிராக ஆதாரம் தேட முயற்சிக்கிறார்கள். அவர்களால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஏனென்றால் எந்த ஆதாரமும் இல்லை... ஏனென்றால் முறைகேடு எதுவும் செய்யப்படவில்லை. அழுக்கான அரசியலால், இதுபோன்ற அதிகாரிகள் தங்களுடைய பொன்னான நேரத்தை இழக்கிறார்கள். இப்படி இருந்தால் நாடு எப்படி முன்னேறும்?" என்று பாஜகவை வெளிப்படையாகத் தாக்கியுள்ளார்

மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா பரிந்துரை செய்த பின்னர், பல கட்டமாக டெல்லி முதல்வர் மணீஷ் சிசோசியா மற்றும் அதிகாரிகள் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்குகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in