இங்கிலாந்தில் 500 செவிலியர்கள் பணி ரெடி: பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு

இங்கிலாந்தில் 500 செவிலியர்கள் பணி ரெடி: பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு

இங்கிலாந்து நாட்டில் 500 செவிலியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்குச் செல்ல முன் விரும்புவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை குவைத், கம்போடியா நாடுகளில் சிக்கித்தவித்து மீட்கப்பட்ட 35 தொழிலாளர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதன் பின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வெளிநாடுகளுக்கு போலி ஏஜெண்டுகளை நம்பி சென்று சிக்கித் தவிக்கும் நிலை அதிகம் காணப்படுகிறது. அவ்வாறு சிக்கித் தவிப்பவர்களை தமிழக அரசு உடனுக்குடன் மீட்டு வருகிறது. 35 தமிழர்கள் குவைத் நாட்டில் கட்டுமானப் பணிக்கு சென்று, உணவு, வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். எந்த நாட்டிற்கு, என்ன வேலைக்கு, எந்த நிறுவனத்திற்கு செல்கிறீர்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டுச் சென்றால் அரசு கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும்.

பல்வேறு நாடுகளுக்கு, வேலைக்காக செல்வதற்கு அரசுத் துறை மூலமாக அனுப்பும் பணியும் நடைபெறுகிறது. இங்கிலாந்து நாட்டில் 500 செவிலியர்கள் தேவை எனக் கேட்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு செல்ல விரும்பி முன்வருபவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பின் அனுப்பப்படுவார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in