அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி எந்த நிலையில் உள்ளது? - யோகி ஆதித்யநாத் விளக்கம்

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ பஞ்ச்கண்ட் பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பணிகள் 50 சதவீத நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

ராஜஸ்தானின் ஸ்ரீ பஞ்ச்கண்ட் பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், "மகாத்மா ராமச்சந்திர வீர் ஜி மகராஜ் மற்றும் சுவாமி ஆச்சார்யா தர்மேந்திர ஜி மகராஜ் ஆகியோர் நாட்டிற்கு தன்னலமற்ற பங்களிப்பை வழங்கியவர்கள். மக்கள் பங்களிப்பை உறுதி செய்வதில் இந்த பீடம் முக்கிய பங்கு வகித்தது.

இந்தியாவின் சனாதன் தர்மம் நமது 'கௌ மாதாக்கள்' (பசுக்கள்) பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது

1949-ல் இயக்கமாக தொடங்கிய ராமர் கோயில் கட்டும் கனவை நனவாக்க அர்ப்பணிப்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, அயோத்தியில் தற்போது ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன” என தெரிவித்தார்.

2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அன்று, பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். அதன் பிறகு வேகமாக கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமர் கோவிலின் கருவறை கட்டுவதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த ஆண்டு ஜூன் மாதம் அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நவம்பர் 9, 2019 அன்று பாபர் மசூதி இருந்த அயோத்தியில் உள்ள நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in