உபியில் 203 தொகுதிகளில் பாஜக முன்னிலை #LIVE

உபியில் 203 தொகுதிகளில் பாஜக முன்னிலை  #LIVE

உபியில் 203 தொகுதிகளில் பாஜக முன்னிலை

403 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக 203 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. சமாஜ் வாதி கட்சி 116 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கொடி பறக்கிறது

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 60 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப்பில் 59 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடித்துவிடலாம். காங்கிரஸ் 35 இடங்களிலும், அகாலிதளம் 14 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

3வது இடத்துக்கு தள்ளப்பட்டார் சித்து

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நவ்ஜோத் சித்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தலைவர்கள் முன்னிலை, பின்னடைவு நிலவரம்

பஞ்சாப் மாநிலம், சம்கார் தொகுதியில் போட்டியிட்டுள்ள பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி முன்னிலை வகித்துள்ளார். பட்டியாலா தொகுதியில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் பின்னடைவை சந்தித்துள்ளார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நவ்ஜோத் சித்து பின்னடைவை சந்தித்துள்ளார். உபியின் கோரப்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வசித்துள்ளார். கர்ஹால் தொகுதியில் சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் உள்ளார்.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கடும் போட்டி

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 40 இடங்களிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும், அகாலிதளம் 8 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், பிற கட்சி 1 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

மணிப்பூரில் பாஜக முன்னிலை

60 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மணிப்பூரில் பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், எஸ்பிபி 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

உபியில் பாஜக தொடர்ந்து முன்னிலை

403 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக 120 இடங்களிலும், சமாஜ்வாதி 93 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 6 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அகிலேஷ் யாதவ், முதல்வர் யோகி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கோவாவில் ஆட்சியை பிடிக்கிறதா காங்கிரஸ்?

40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டப்பேரவை தேர்தலில் 20 இடங்களில் காங்கிரசும், 16 இடங்களில் பாஜகவும், திரிணமூல் 4 இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலை

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 23 இடங்களில் ஆம் ஆத்மியும், 17 இடங்களில் காங்கிரசும், 2 இடங்களில் பாஜகவும், அகாலிதளம் 5 இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளது.

உத்தராகண்டில் பாஜக- காங்கிரஸ் கடும் போட்டி

70 தொகுதிகள் கொண்ட உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும், பிற கட்சிகளும் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்துள்ளன.

முன்னிலை நிலவரம்

உத்தரப்பிரதேசம்

பாஜக - 30

காங்கிரஸ் - 1

சமாஜ்வாதி - 35

பகுஜன் சமாஜ் - 3

பஞ்சாப்

காங்கிரஸ் - 4

பாஜக - 1

ஆம் ஆத்மி - 4

அகாலிதளம் - 1

கோவா

பாஜக - 3

காங்கிரஸ் - 1

ஆம் ஆத்மி -0

மணிப்பூர்

பாஜக - 0

காங்கிரஸ்- 0

உத்தராகண்ட்

பாஜக - 4

காங்கிரஸ் - 3

ஆம் ஆத்மி - 0

பகுஜன் சமாஜ் - 0

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, அடுத்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் முன்னணி நிலவரங்கள் வெளியாகி, இந்த மாநிலங்களில் அடுத்து யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in