ஓபிஎஸ்
ஓபிஎஸ்

எனக்குன்னே வருவீங்களா?... ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டி... ஓபிஎஸ்சுக்கு புது தலைவலி!

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 3 பேர் களத்தில் இறங்கியிருப்பது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை கைப்பற்ற எடுத்த பல சட்டப் போராட்டங்களிலும் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் அதிமுக கட்சி பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்
ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்

இதையடுத்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் இயங்கி வருகிறார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக களமிறங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று ஏற்கெனவே அவருக்கு சிக்கல் வந்துள்ள நிலையில், அவரது பெயராலும் இப்போது சிக்கல் முளைத்துள்ளது.

பொதுவாக ஏதேனும் தொகுதியில் முக்கிய தலைவர்கள் போட்டியிட்டால், அவரின் பெயர் கொண்ட பலரும் போட்டியிடுவது வழக்கம். ஆனாலும் ஒரே இனிசியல் போன்றவற்றவை அமைவது கஷ்டம்தான். இந்த சூழலில்தான் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 4 பேர் போட்டியில் குதித்துள்ளது ஓபிஎஸ் டீமை பீதியடைய வைத்துள்ளது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

நேற்று சுயேட்சை வேட்பாளராக போட்டியிட ஓபிஎஸ் வேட்புமனுத்தாக்கல் செய்த சூழலில், உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்ற மற்றொரு நபரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தெற்கு காட்டூர் பகுதியை ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் என்ற நபர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் இன்னும் 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் நிற்கவுள்ளார். இந்த சூழலில் இன்னும் 4 ஓ.பன்னீர்செல்வங்களும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழுத்து வரிசைப்படி இந்த 5 பேரின் பெயர்களும் அருகருகே இடம்பிடித்தால் தங்களுக்கான வாக்குகள் பிரியும் என்று அஞ்சுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ஓபிஎஸ்சுக்கு போட்டியாக நேற்று ஒரு ஓபிஎஸ் களமிறங்கிய நிலையில், இன்று மேலும் 3 ஓபிஎஸ்-கள் கோதாவில் குதித்துள்ளனர். இதேபோல இன்னும் சில பன்னீர்செல்வங்கள் போட்டியிட வந்தால் என்னதான் செய்வது என புதிய தலைவலியோடு உட்கார்ந்திருக்கிறது ஓபிஎஸ் முகாம்.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in