புதுச்சேரியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்... செல்லாத பழைய ரூ.500 நோட்டுகளும் பறிமுதல்!

புதுச்சேரியில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் ரூ.4.09 கோடி பறிமுதல்
புதுச்சேரியில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் ரூ.4.09 கோடி பறிமுதல்

புதுச்சேரியில், தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ.4.09 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதில் செல்லாத பழைய ரூ.500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர். மாநில எல்லைகளிலும், வாகனங்களிலும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 5 நாட்களில் சோதனைகள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டதால் 1.39 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தது குறித்தும் விசாரணை
தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தது குறித்தும் விசாரணை

புதுச்சேரி 100 அடி ரோடு ஜான்சி நகரிலுள்ள முருகேசன் என்பவர் பெரியபாளையத்தம்மன் என்ற பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் பறக்கும் படையினருக்கு கிடைத்தது. இதையடுத்து இன்று காலையில் அங்கு சென்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அதில், செல்லாத 2 ஆயிரம் மற்றும் பழைய 500 ரூபாய் நோட்டுகளும் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3.68 கோடி ஆகும்.

நிதி நிறுவன அதிபர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
நிதி நிறுவன அதிபர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

இவருக்கு சொந்தமான நெல்லித்தோப்பில் உள்ள பெரியபாளையத்தம்மன் பைனான்ஸ் நிறுவனத்திலும் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு சுமார் 45.46 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. பணத்திற்கான ஆவணங்களை முருகேசனிடம் கேட்டபோது, அவர் இல்லை என கூறியதால், தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. எவ்வித ஆவணங்களும் இன்றி கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in