டேட்டிங் செயலியில் அழைத்த பெண்: இரவில் சந்திக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

டேட்டிங் செயலியில் அழைத்த பெண்: இரவில் சந்திக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

டேட்டிங் செயலி மூலம் தொடர்பு கொண்ட பெண்ணை, இரவில் தனிமையில் சந்திக்க சென்ற இளைஞரை வழிமறித்து அவரிடம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்போன் செயலிகள் மூலம் இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் பெறும் வசதி பொதுமக்களுக்கு வந்துவிட்டது. இதுபோன்ற செயலிகளால் நமக்குப் பலன்தான் என்றாலும், பாதகங்களும் இல்லாமல் இல்லை. கோவையில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

கோவையைச் சேர்ந்தவர் 25 வயது நிரம்பிய இளைஞர் ஒருவரின் செல்போனுக்கு ஜூலை 27-ம் தேதி இரவு 10 மணிக்கு அழைப்பு வந்திருக்கிறது. அப்போது எதிர்முனையில் பேசிய பெண், நாகம்மநாயக்கன்பாளையம் வந்தால் தன்னை நேரில் சந்தித்துப் பேசலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்த இளைஞர் அந்த பெண் வரச்சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே அந்த பெண்ணுடன் மூன்று ஆண்கள் இருந்தனர். அப்போது அவரை கடுமையாகத் தாக்கி அவரிடமிருந்து, செல்போன், ஏடிஎம் கார்டு, இருசக்கர வாகனம் ஆகிவற்றை பறித்துச் சென்றனர். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இளைஞர், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ‘கிரைண்டர் டேட்டிங்’ என்ற செல்போன் செயலி மூலம் ஆண்களை குறிவைத்து செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு எதிர்முனையில் பெண்கள் போல் பேசி அவர்களை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஒரு கும்பல் செயல்படுவது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சூலூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா(20), ராஜேஷ் குமார்(24), இளந்தமிழன்(29), சுரேஷ்(23) ஆகியோரை இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து நான்கு சக்கர வாகனங்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in