3,700 கோடி மதிப்பிலான அறநிலையத்துறை சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு

3,700 கோடி மதிப்பிலான அறநிலையத்துறை சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான அறநிலையத்துறை சொத்துகள் மீட்கப்பட்டு இருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4.03 கோடி மதிப்பிலான திருப்பணிகளின் தொடக்கவிழா இன்று நடந்தது. இப்பணிகளைத் தொடங்கிவைத்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான 3,750 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அம்பாள் சன்னதி மேற்கு பிரகாரம், கரு உருமாரி தெப்பம், அம்பாள் சன்னதி மேல்கூரை ஓடு அமைக்கும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் இந்த பணிகள் முடியும். டி.வி.எஸ் நிறுவனம் இதற்கு நிதி பங்களிப்பு செய்துள்ளது.

ஆயிரம் ஆண்டுக்கு மேலான கோயில்களில் திருப்பணி செய்ய 100 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 60 கோடிக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. 1500 கோயில்களில் 1000 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழைமையான 100 சிறிய கோயில்களைப் புனரமைக்க 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திருப்பணிகள், புனரமைப்பு, ஓடாத தேரை ஓடவைக்கும் புனரமைப்புப் பணிகளும் நடந்து வருகின்றன” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in