ஒரே டிக்கெட்டில் மெட்ரோ ரயில், புறநகர் ரயில், மாநகரப் பேருந்தில் பயணம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை

ஒரே டிக்கெட்டில் மெட்ரோ ரயில், புறநகர் ரயில், மாநகரப் பேருந்தில் பயணம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை

ஒரே பயணச்சீட்டு மூலம் மெட்ரோ ரயில், புறநகர் ரயில், மாநகரப் பேருந்து ஆகியவற்றில் பயணம் செய்யும் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருக்கிறார்.

சென்னை மாநகர பகுதியில் பயணம் மேற்கொள்வோர்கள் சில நேரங்களில் மூன்று விதமான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணமாகச் செங்கல்பட்டிலிருந்து திருவல்லிக்கேணி பகுதிக்கு ஒருவர் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால் புறநகர் ரயில், மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து என மூன்றுவிதமான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. விரைவாகச் சென்றடையும் நோக்கில் பேருந்து, ரயில் என மாறிமாறி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. புறநகர் ரயிலிலும், மெட்ரோ ரயிலிலும் பயணம் மேற்கொள்வோர்கள் டிக்கெட் எடுப்பதற்காக சில நிமிடங்களைச் செலவிட நேரிடுகிறது.

இதனால் குறிப்பிட்ட ரயிலை தவற விடும் சூழல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக மூன்று விதமான பயணங்களுக்கும் ஒரே பயணச் சீட்டு வழங்குவதற்கான சாத்தியக் கூறு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். மெட்ரோ ரயில் நிர்வாகம், புறநகர் ரயில் நிர்வாகம், மாநகர பேருந்து போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in