அரசு பேருந்தில், இருக்கையுடன் நடத்துநருடன் சாலையில் விழுந்த சம்பவம்; பணிமனை மேலாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்!

பேருந்தில் இருந்து நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று சாலையில் விழுந்ததால் பரபரப்பு
பேருந்தில் இருந்து நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று சாலையில் விழுந்ததால் பரபரப்பு

திருச்சியில் அரசுப் பேருந்து இருக்கை நடத்துநருடன் சாலையில் உடைந்து விழுந்த சம்பவம் தொடர்பாக, பணிமனை மேலாளர் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து, கே.கே.நகர் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டது. அந்த பேருந்தில் ஏற்கனவே சேதமடைந்திருந்த இருக்கையில் எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த நடத்துநர் முருகேசன் (54) என்பவர் அமர்ந்திருந்தார். கலையரங்கம் அருகே ஒரு திருப்பத்தில் பேருந்து திரும்பிய போது பேருந்தில் இருந்த சேதம் அடைந்த இருக்கை உடைந்து சாலையில் விழுந்தது. இதில் அந்த இருக்கையில் அமர்ந்திருந்த நடத்துநர் முருகேசனும் இருக்கையுடன் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

அமைச்சர் எஸ்,எஸ்.சிவசங்கர்
அமைச்சர் எஸ்,எஸ்.சிவசங்கர்

உடனடியாக வேறு பேருந்து வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அந்த பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசுப் பேருந்து பணிமனைகளில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை என்பதால் இது போன்ற விபத்துக்கள் நேர்வதாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர்.

பேருந்தில் இருந்து நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று சாலையில் விழுந்ததால் பரபரப்பு
பேருந்தில் இருந்து நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று சாலையில் விழுந்ததால் பரபரப்பு

இது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்திருந்த தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ”கடந்த அதிமுக ஆட்சியின் போது புதிய பேருந்துகள் வாங்காததே இது போன்ற பழைய பேருந்துகள் இயக்கப்படுவதற்கு காரணமாக அமைந்து விடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் பேருந்து சேதம் அடைந்த சம்பவம் தொடர்பாக, தீரன்நகர் கிளை பணிமனை மேலாளர் ராஜசேகர் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in