தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.பிக்கள்: ஸ்தம்பிக்கும் நாடாளுமன்றம்!

தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.பிக்கள்: ஸ்தம்பிக்கும்  நாடாளுமன்றம்!

மாநிலங்களவையில் இன்று மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்தால் இன்றும் மாநிலங்களவையில் இருந்து 2 ஆம் ஆத்மி உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுயேட்சை உறுப்பினர் உட்பட மேலும் 3 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே மாநிலங்களவையில் 20 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மக்களவையிலும் 4 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மழைக்காலக் கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட காரணத்தால் இதுவரை மொத்தம் 27 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, எதிர்க்கட்சிகள் மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடத்தக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in