வாரம் 3 முட்டை, செறிவூட்டப்பட்ட பிஸ்கட் பாக்கெட்: முதல்வர் அறிவிப்பு யாருக்குத் தெரியுமா?

வாரம் 3 முட்டை, செறிவூட்டப்பட்ட பிஸ்கட் பாக்கெட்: முதல்வர் அறிவிப்பு யாருக்குத் தெரியுமா?

அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் 3 மூட்டைகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பில் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கிராமப்புற வளர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், கிராமப்புறங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் நிலை பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும், அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டைக்குப் பதிலாக மூன்று முட்டைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதுபோல் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குச் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in