எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் கர்நாடகாவில் வேண்டாம்: மேகேதாட்டு விவகாரத்தால் திமுக திடீர் முடிவு!

மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் கர்நாடகாவில் வேண்டாம்: மேகேதாட்டு விவகாரத்தால் திமுக திடீர் முடிவு

எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டத்தை கர்நாடகாவில் நடத்த வேண்டாம் என்று திமுக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் ஜூன் 23ம் தேதி பாட்னாவில் நடந்தது. அடுத்தக் கூட்டம் சிம்லாவில் நடத்தப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தக்கூட்டம் ஜூலை 13 - 14 தேதிகளில் பெங்களூருவுக்கு மாற்றப்படுவதாக சரத் பவார் சமீபத்தில் அறிவித்தார்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட அம்மாநில காங்கிரஸ் அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எனவே தற்போது பெங்களூருவில் நடைபெறவுள்ள 2வது எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற திமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேகேதாட்டு மற்றும் காவிரியில் நீர்திறக்க மறுக்கும் கர்நாடகாவின் முடிவுக்கு எதிராக தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரு கூட்டத்தில் கலந்துகொண்டால் அது விமர்சனத்தை உருவாக்கும் என திமுக கருதுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in