காங்கிரஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி: இமாசல பிரதேசத்தில் பாஜகவில் இணைந்த 26 தலைவர்கள்!

காங்கிரஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி: இமாசல பிரதேசத்தில் பாஜகவில் இணைந்த 26 தலைவர்கள்!

இமாசல பிரதேச தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து மொத்தம் 26 தலைவர்கள் விலகி ஆளும் பாஜகவில் இணைந்தனர்.

இமாசலப் பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச் செயலாளர் தரம்பால் தாக்கூர் காந்த் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் 26 பேர் நேற்று பாஜகவில் இணைந்தனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் பாஜக மாநில தேர்தல் பொறுப்பாளர் சுதன் சிங் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சிம்லா பாஜக வேட்பாளர் சஞ்சய் சூதும் கலந்து கொண்டார். பா.ஜ.கவின் வரலாற்று வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என

முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்தார்

முன்னதாக, தேர்தல் பரப்புரையில் பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் ஆட்சியைப் பாராட்டியதுடன், “ மக்கள் உற்சாகமாகவும், பிரதமர் மோடி மீது நம்பிக்கையுடனும் உள்ளனர். முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மாநிலத்தில் மக்கள் நல கொள்கைகளை அமல்படுத்தியுள்ளார்" என்றார்.

இமாசலத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in