2028 தான் சட்டமன்றத்திற்கான எனது கடைசி தேர்தல்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிரடி

குமாரசாமி
குமாரசாமி 2028 தான் சட்டமன்றத்திற்கான எனது கடைசி தேர்தல்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிரடி

கர்நாடகாவில் 2028 ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்தான் எனது கடைசி சட்டமன்றத் தேர்தல், ஆனால் அதன்பிறகும் அரசியலில் தீவிரமாக இருப்பேன் என்றும், மற்ற தேர்தல்களிலும் போட்டியிடப் போவதாகவும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி. குமாரசாமி அறிவித்தார்.

இது தொடர்பாகப் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, "நான் சொன்னது 2028 தான் சட்டமன்றத்திற்கான எனது கடைசி தேர்தல். அது சட்டமன்றத்திற்கான எனது கடைசி தேர்தல் மட்டுமே. ஆனால், அரசியலில் இருக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. அரசியலில் இருந்துகொண்டு தேர்தலையும் சந்திப்பேன். சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே நான் செய்ய வேண்டியதை சொன்னேன்" என்று கூறினார். 63 வயதான குமாரசாமியின் இந்த கருத்து, பிற்காலத்தில் தேசிய அரசியலில் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in